THE HONEST MAN AND THE CAVE OF WONDER MORAL STORY IN TAMIL
நேர்மையான மனிதனும் அதிசய குகையும்
முன்பொரு காலத்தில் ஒரு ஏழைக் குடும்பமும், பணக்கார குடும்பமும் ஒரு மலையின் அடிவாரத்தில் வசித்து வந்தனர், மலையின் உச்சியில் ஒரு மிகப்பெரிய காடு ஒன்றும் இருந்தது. ஒவ்வொரு நாளும் அந்த ஏழைக் குடும்பத்தின் தலைவர் உணவு மற்றும் உடைகள் வாங்க மரங்களை வெட்டி விற்க காட்டுக்குச் செல்வான். அந்த காட்டில் ஒரு கல் சிங்கம் இருக்கும் அதற்கு உணவு கொடுத்துவிட்டு விறகு வெட்டச் செல்வான். வழக்கமாக ஏழை மனிதன் கல் சிங்கத்தின் வாயின் அருகே சிறிது பார்லி உணவும், வெண்ணையும் வைத்துக்கொண்டு, "சிங்கமே.. தயவுசெய்து இந்த உணவை சாப்பிடு என்று கூறுவான்" பிறகு விறகு வெட்டச் செல்வான்.
இவ்வாறு நாட்கள் கடந்து சென்றது…
ஒரு நாள் அந்த ஏழை மனிதன் கல் சிங்கத்திற்கு உணவளித்துக்கொண்டிருந்த போது அந்த சிங்கம் "நன்றி நண்பனே… நீ ஒரு நல்ல மனிதர்" என கூறியது. அந்த ஏழை மனிதன் பயந்துபோய் "சிங்கமே உங்களுக்கு உணவளிக்க ஒரு உதவியாளர் இல்லையே அதனால் தான் நான் உங்களுக்கு சில உணவுக் கொடுக்கின்றேன், என்னிடம் நல்ல உணவு இல்லை, ஏனென்றால் நான் ஒரு ஏழை என கூறினர்." பதிலுக்கு அந்த கல் சிங்கம் "நீ ஒரு நேர்மையான மனிதன் நாளை காலை சூரிய உதயத்திற்கு முன்பு இங்கு வந்துவிடு நான் உனக்கு ஏதேனும் ஒன்று தருவேன் என்று கூறியது." அதன்பின் அந்த ஏழை மனிதன் தன் வெட்டிய விறகுகளை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினான்.
மறுநாள் காலையில் அந்த ஏழை மனிதன் வருகிறான் தன்னிடம் இருந்த உணவுகளை கல் சிங்கத்திற்கு கொடுக்கிறான். அந்த கல் சிங்கம் "என் வயிற்றில் நிறைய தங்கம் இருக்கிறது நீ சிலவற்றை எடுத்துக் கொள்ளலாம் ஆனால், சூரியன் உதிக்கும் போது நீ கண்டிப்பாக உன் கையை என் வயிற்றில் இருந்து வெளியேற்ற வேண்டும். ஏனென்றால் அந்த நேரம் என் வாய் மூடிவிடும் என கூறியது. ஆமாம் சரி எனக்கு புரிந்தது என அந்த ஏழை மனிதன் கூறினர்.
பின் கல் சிங்கத்தின் வயிற்றில் கையை வைத்து அவர் வைத்திருந்த சிறிய பையை தங்கத்தால் நிரப்பினார். "இது எனக்கு போதுமானது" என்று அவர் சொன்னார். அவர் அந்த கல் சிங்கத்திற்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இப்போது அந்த ஏழை மனிதன் பணக்காரர் ஆக மாறினார். பக்கத்து பணக்கார வீட்டுக்காரர் பொறாமைப்பட்டார்கள், "நீங்கள் எப்படி இவ்வளவு பணக்காரர்களாகிவிட்டீர்கள் என கேட்டனர்." அதற்கு அந்த நேர்மையான மனிதர் கல் சிங்கத்தைப் பற்றி அவரிடம் சொன்னார்.
அதன்பின் அந்த பணக்காரர் பழைய ஆடைகளை அணிந்துகொண்டு காட்டுக்குச் சென்றார், ஏழை மனிதன் செய்ததைப் போல் ஒவ்வொரு நாளும் கல் சிங்கத்திற்கு பார்லி உணவும், வெண்ணையும் கொண்டு உணவளித்தார். ஒரு நாள் அந்த கல் சிங்கம் ஏழை மனிதனிடம் சொன்னதை இவரிடமும் சொன்னது இதை கேட்டு பணக்காரன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.
மறுநாள் ஒரு பெரிய பையுடன் வந்தான், சிங்கத்தின் வயிற்றில் இருந்து தங்கத்தை அவன் வைத்திருந்த பெரிய பையில் நிரப்பிக் கொண்டிருந்தான். சூரியன் உதித்து மேலே உயர்ந்தது, ஆனால் பேராசை கொண்ட மனிதனுக்கு இன்னும் அந்த தங்கம் போதுமானதாக தோன்றவில்லை இதனால் அந்த கல் சிங்கத்தின் வாய் கவ்விக் கொண்டு, மீண்டும் திறக்கவில்லை.
"நீங்கள் எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும் சரி, நீங்கள் பேராசை கொண்டவராக இருந்தால் உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் அது போதுமானதாக அமையாது எனவே நீங்கள் எப்போதும் மனதின் அடிப்படையில் ஒரு ஏழையாக இருப்பீர்கள். "
"நீங்கள் ஏழை ஆனால் ஒரு நல்ல மனிதர் என்றால் நீங்கள் எப்போதுமே மனதின் அடிப்படையில் ஒரு பணக்காரராக இருப்பீர்கள்."
"ஆசை இருக்கலாம் ஆனால் பேராசை இருக்கக்கூடாது"
0 Post a Comment