The Clever Fish Moral Story In Tamil | Short Moral Story For Kids
புத்திசாலி மீன்
ஒரு மீனவர் தினமும் ஒரு ஆற்றில் மீன் பிடிப்பது வழக்கம் அதே போல் ஒரு நாள் அந்த மீனவர் மீன் பிடிக்க நதிக்கு சென்றார், அப்போது மீன் பிடிப்பதற்காக அவர் தனது வலையை ஆற்றில் வீசி சிறிது நேரம் காத்திருந்து அனைத்து மீன்களும் வலைக்கு வந்தபின் அவர் வலையை மேலே தூக்குவர் இதனால் நிறைய மீன்கள் அவருக்கு கிடைக்கும் அப்போதுதான் அவர் நிறைய மீன்களை சந்தையில் விற்க முடியும்.
இதேபோல் ஒரு நாள் அந்த மீனவர் மீன் பிடிக்க நதிக்கு செல்கிறார் அப்போது அவர் நிறைய மீன்கள் பிடிப்பதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் அதேபோல் அவருக்கு வலையில் நிறைய மீன்கள் கிடைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே நதிக்கு செல்கிறார்.
அந்த நதிக்கு சென்றபின் அவர் வலையை வீசி சிறிது நேரம் கழித்து வலையை மேல் இழுத்து வலையில் இருக்கும் மீன்களை எண்ணுவதற்கு தயாராகிறார் ஆனால் அந்த வலையில் ஒரு சிறிய மீன் மட்டுமே இருப்பதைக் கண்டார்.
அந்த வலையில் இருந்த மீன் திடீரென்று அவரிடம் பேச தொடங்குகிறது. "ஓ மீனவனே.. மீனவனே... தயவுசெய்து என்னை விட்டு விடுங்கள் என கூறியது," ஆனால் அந்த மீனவர் மீனின் வேண்டுகோளுக்கு எந்த கவனமும் கொடுக்கவில்லை, அதன்பின் மீண்டும் அந்த சிறிய மீன் அவனிடம் கேட்டது "மீனவனிடம் ஓ மீனவனே.. மீனவனே.., நான் உங்களுக்கு ஒரு உதவி செய்கிறேன், நீங்கள் என்னை மீண்டும் தண்ணீரில் விட்டால் நான் உங்களைப் பற்றி என் அனைத்து நண்பர்களிடமும் சொல்வேன். இதன்மூலம் நான் அவர்களை இங்கு அழைத்துக்கொண்டு வருவேன். எனவே, நீங்கள் அடுத்த முறை வரும்போது உங்களுக்கு அதிகமான மீன்கள் கிடைக்கும்".
மீனவர் அவருக்குள் யோசிக்கிறார் இந்த யோசனை அருமையாக இருக்கிறது, அது மோசமானதல்ல என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். பின் அவர் இன்று ஒரு சிறிய மீன் நாளை எனக்கு நிறைய மீன் கிடைக்கும் என நினைத்துக் கொண்டே அந்த சிறிய மீனை மீண்டும் ஆற்றில் விட்டுவிட்டார்.
சிறிய மீன் மிகவும் மகிழ்ச்சியாக, திரும்பி இந்தப்பக்கம் வரக்கூடாது என நினைத்துக்கொண்டு ஆற்றில் நீந்தியது. அடுத்த நாள் அந்த மீனவர் அதிக மீன்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் ஆற்றிற்கு வலையுடன் வருகிறார். ஆனால் அங்கு ஒரு மீன்களும் அவருக்கு கிடைக்கவில்லை ஏமாற்றத்துடன் அந்த மீனவர் வீட்டிற்கு சென்றார்.
இதுவே அந்த மீன் புத்திசாலி தனமாக எதும் யோசிக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் சந்தைக்கும் விற்பனைக்கு சென்றிருக்கும். புத்திசாலி தனமாக யோசித்தால் தப்பித்துக் கொண்டது.
"நாமும் இதேபோல் மிக முக்கியமான சவால் தருணத்திலிருந்து நம் வாழ்க்கையை காப்பாற்றி கொள்ள மிகவும் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்."
0 Post a Comment