The Intelligent Buffalo[Bison] Story In Tamil | Fairy Tales Story for Teenagers
புத்திசாலி எருமை
ஒரு காலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பீட்டர் என்ற விவசாயி வசித்து வந்தார். அவருக்கு ஒரு சிறிய சொந்த வீடு மற்றும் சிறிய நிலம் ஆகியவை கொண்டிருந்தார். மேலும் அவர் ஒரு எருமையையும் வளர்த்து வந்தார் அந்த எருமையின் பெயர் பைசன். இது ஒரு சாதாரண பெயர் இல்லை, அந்த பெயர் வைப்பதற்கு சொந்தக் காரணங்கள் இருக்கின்றன. இந்த எருமையை காணும் முன் பீட்டர் மிகவும் ஏழ்மையான மனிதராக இருந்தார். எருமை பைசன் உண்மையில் தன் முதலாளிக்காக மிகவும் கடினமாக உழைத்தது. அவரது ஒரே எருமையான பைசன் அவர் முழு வயலை இரவும் பகலும் உழுது, பீட்டருக்கு எல்லா வகையான வேலைகளையும் செய்ய உதவியது. பீட்டர் அனைத்து வகையான தானியங்களையும் வளர்க்கத் தொடங்கினார்.
பீட்டர் தனது சுற்றுப்புறத்தில் நிறைய மரியாதைகளைப் பெற்றவர் இதற்கு காரணம் பைசன், ஆகையால் அன்பான எருமை என பைசனை அழைத்து வந்தார். பைசன் ஒரு சிறந்த எருமை மற்றும் ஒரு சுதந்திரமான, உற்சாகமான விலங்கு என்று பீட்டருக்கு தெரியும். பீட்டர் வேலை இல்லாதபோது பைசனுடன் ஊர் சுற்றித் திரிந்து, மாலை ஆனதும் இருவரும் வீடு திரும்புவார்கள்.
அப்படியே காலம் கடந்து போய்க்கொண்டிருந்தது.......
அவர் பைசனை மிகவும் நேசித்தார், ஆனால் பணிச்சுமை அதிகமாக இருப்பதையும், அதை பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் உணர்ந்தார். அதனால் பீட்டர் மற்றொரு எருமை வாங்கினார். ஒரு நாள், வயலை உழவு செய்யும் போது, பைசன் அதிகமாக சுவாசிக்கத் தொடங்கியது. இதனால் பீட்டர் தனது இரு எருமைகளையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அன்றிரவு பீட்டருக்கு தூக்கம் வரவில்லை. பைசனை விடுவிப்பதற்கான நேரம் இது என்று அவர் அறிந்தார்.
அடுத்த நாள் அவர் பைசனுடன் காட்டுக்கு சென்றார், அங்கு சென்ற பின் பைசனின் கழுத்தில் கட்டியிருந்த மணியை கழட்டினார், பைசன் மிகவும் சந்தோசத்தில் தலையை ஆட்டியது.
"பைசன் நீ ஒரு நல்ல எருமை..! நீ செய்த வேலைக்கு என்னால் கைமாறாக எதுவும் திருப்பிச் செலுத்த முடியாது, இதற்குமேல் நீ வேலை செய்ய வேண்டியதில்லை, நீ இப்போது சுதந்திரமாக இருக்கலாம். நான் உன்னை எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்பேன் என் நண்பா. இந்த நிலபரப்பில் நீ எங்கு வேண்டுமானாலும் அலைந்து திரியலாம். பைசன் நீ எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வரலாம் என பீட்டர் கூறினார்." பைசனுக்கு தனது நண்பன் பீட்டரை விட்டு வெளியேறுவது வருத்தமாக இருந்தது, ஆனால் அந்த புது காட்டிற்குள் என்ன இருக்கும் என்பதை அறிய அது உற்சாகமாக இருந்தது.
பைசன் பயமில்லாமல் காட்டிற்குள் சுற்றித் திரிந்து ஓடைகளில் இருந்து தண்ணீரைக் குடித்துவிட்டு, வழியில் இருக்கும் புற்களை சாப்பிட்டுவிட்டு அங்குள்ள புதிய காட்டை மகிழ்ச்சியுடன் அனுபவித்து மகிழ்ந்தது. விரைவில் சூரியன் மறைய தொடங்கியது. பைசன் ஓய்வெடுக்க ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடியது. அங்கு ஒரு குளத்தின் அருகே ஒரு குகை இருப்பதை பார்த்த பைசன் "இது நமக்கு ஓய்வு எடுக்க தகுந்த இடம் என நினைத்து மிகவும் சோர்வான நிலையில் ஓய்வு எடுக்க தொடங்கியது."
இவ்வாறு அன்று இரவுகள் கழிந்தன,....
மறுநாள் பைசன் குகையில் இருந்து வெளிவந்து அருகிலுள்ள குளத்தில் தண்ணீரைக் குடித்துவிட்டு புற்களை மேய தொடங்கியது. அமைதியாக ஒருசில நாட்கள் கழிந்தன....
பைசன் காட்டில் அவனது வாழ்க்கையை நேசிக்கத் தொடங்கியது, ஆனால் பைசன் ஒரு எளிய மற்றும் அப்பாவி எருமை, இந்தக் காடு பல விலங்குகளின் வீடு என்பதை அது அறிந்திருக்கவில்லை. அதுமட்டுமின்றி அங்கிருக்கும் அனைத்து விலங்குகளும் பைசன் போல் அப்பாவியாக இருக்காது. ஒவ்வொரு நாளும் பைசன் தனது புதிய வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தபோது, டிம்மி என்ற ஒரு நரி பைசனை கவனித்தது. பைசன் ஒவ்வொருமுறையும் குகையை விட்டு வெளியேறும் போதும் மற்றும் ஒவ்வொரு இடத்திற்கு செல்லும் போதும் டிம்மி பைசனுக்கு பின்னல் இருந்து கவனித்துக் கொண்டிருக்கும். பைசன் அதன் நாட்களை மிகவும் உற்சாகத்தடன் அனுபவித்தது இதனால் டிம்மி இருப்பதை அது ஒருபோதும் உணரவில்லை.
டிம்மி: "இந்த எருமை என்ன இவ்வளவு தைரியமாக காட்டை சுற்றித் திரிகிறது, அது மிகவும் தைரியமான எருமையா அல்லது மிகவும் முட்டள் எருமையா?, அதாவது அந்த எருமை யாருடைய குகையில் வசிக்கிறது என்பது அவருக்கே தெரியாதா?"
சரி ஏதாவது கேட்போம் என நரி வெளிவந்தது....
டிம்மி: "வணக்கம்...,! நீங்கள் இந்த காட்டிற்கு புதியதாக வந்தவரா?."
பைசன்: "நான் ஒவ்வொரு நாளும் இங்கே புல் மேய்வதர்க்கு வருவேன், நான் என்னை புதியவர் என்று அழைக்க மாட்டேன்..!"
என சிரித்துக் கொண்டே கூறியது.
டிம்மி: "நீங்கள் ஒரு நகைச்சுவையான சிறிய விலங்கு..!"
பைசன்: "ஒரு சிறிய நரி நீ என்னை பார்த்து சிறிய விலங்கு என்று சொல்கிறாயா? உண்மையில் நீதான் சிறிய விலங்கு."
டிம்மி: "உனக்கு எவ்வளவு தைரியம் என்னையே கேலி செய்கிறாய், நான் இந்த காட்டிற்கு ராஜா என் குகையில் தான் நீ வாழ்கிறாய் இங்கு இருக்கும் அனைத்து விலங்குகளும் என்னை பார்த்து பயந்துதான் வாழ்கின்றது. இங்கே நீ வாழ விரும்பினால் என்னை வணங்க வேண்டும்."
பைசன்: "நீ சொல்வது சரிதான், நான் இந்த காட்டிற்கு புதியவன் தான், ஆனால் நீ சொல்வதை எல்லாம் நம்புவதற்கு நான் முட்டாள் என்று அர்த்தம் இல்லை. இங்கே கவனி நரியே உண்மையில் நீ இந்த காட்டின் ராஜா இல்லை, இந்த காடு எவ்வளவு பெரியது என்று கூட உனக்குத் தெரியாது என்று எனக்கு தெரியும். என் நேரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு இங்கு இருந்து செல்."
இவ்வாறு அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
டிம்மி பயங்கர கோபத்துடன் பைசனை பார்த்துக் கொண்டிருந்தது, ஒரு நாள் என்னை அவமான படுதியதர்க்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என நினைத்துக் கொண்டது.
மறுபுறம் பைசன் இப்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தது.
பைசன்: "அந்த தந்திரமான நரிக்கு நான் எங்கு வசிக்கிறேன் என்று தெரிந்திருக்கிறது, அதாவது அது என்னைப் கவனித்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். ஹ்ம்ம்... இதைப் பற்றி நான் முன்பு யோசிக்கவில்லை. ஆனால் அந்த குகை யாரோ ஒருவருக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். அந்த குகையின் சரியான உரிமையாளர் வந்துவிட்டால் நான் என்ன செய்வது? இனி நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்."
அன்றிரவு சந்திரன் பளபளப்பாக வானத்தில் பிரகாசமாக பிரகாசித்தது, பைசனும் அந்த குகைக்குள் துங்கிக்கொண்டு இருந்தது. திடீரென ஒரு சத்தம் கேட்டது, உடனே பைசன் ஒரு சிறிய துளை வழியாக எட்டிப் பார்த்தது அங்கே ஒரு விசித்திரமான நிழலைக் கண்டது. முதலில் அந்த நரி மீண்டும் அவரைத் தொந்தரவு செய்ய வந்துவிட்டது என நினைத்தது, ஆனால் அந்த உருவம் அருகில் வர தொடங்கியது, அதை பார்த்து பைசன் பயத்தில் நடுங்கியது. ஆம் அது ஒரு புலி அது தான் இந்த குகையின் உரிமையாளர்.
பைசன்: "இல்லை....இல்லை... நிச்சயமாக இந்த குகை புலிக்கு சொந்தமானது தான், நான் இப்போது என்ன செய்வது.! கண்டிப்பாக அது என்னை சாப்பிட்டு விடும்."
புலி நெருங்கி வருவதைத் தொடர்ந்து பைசனின் நடுக்கம் அதிகரித்தது.
பைசன்: "யோசி.... யோசி.... பொறுமையாக ஏதாவது யோசி.... ஆக ஒரு யோசனை.... என்னால் அவரை பார்க்க முடியும் ஆனால் அவரால் என்னை பார்க்க முடியாது..! இதுதான் என்னோட நன்மை. சற்றும் தாமதிக்காமல் பைசன் அதன் குரலை உயர்த்தி குகையினுள் இருவர் இருப்பதாக கருதிக்கொண்டு " ஹ ஹ அந்த புலி வருகிறது, ஷூ....சத்தம் போடாதே நாம் இருப்பதை புலிக்கு தெரிந்தால் நமக்கு சாப்பாடு கிடைக்காது"
"ஒஹ்ஹ்ஹ் சரி மன்னித்துவிடு"
"அங்கேபார் அந்த புலி எவ்வளவு சுவையாக இருக்கும் என்று பார்"
"இங்கு வசிப்பவர் நாம் இருவருக்கும் சாப்பிட போதுமானதாக இருக்குமா என்று தெரியவில்லை."
"நீ கூறுவது சரியாக இருக்கும். ஹாஹாஹா.... இன்று நம் இரவு உணவு முற்றிலும் சிறியது."
இவ்வாறு குகைக்குள் இருக்கும் பைசன் இருவெடமிட்டு பேசியது. அந்த புலி மிகவும் பயத்துடன் யார் இந்த விலங்குகள் என நினத்தது. மீண்டும் குகையினுல் இருந்து சத்தம் கேட்டது, "ஏன் அந்த புலி வெளியே நிற்கின்றது, நாம் ஏன் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறோம், எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. காத்திருப்பதற்கு பதிலாக ஏன் நாம் வெளியே சென்று அதனை தாக்கக்கூடாது. புலியால் நாம் இருவரிடமும் சண்டையிட முடியாது." இதனை கேட்டா அந்த புலி தலை தெறிக்க ஓடியது. இந்த சிந்தனை வேலை செய்தது. பைசன் நிம்மதி அடைந்தது, இப்போது எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருப்பதன் முக்கியத்துவத்தை பைசன் புரிந்துக் கொண்டது.
மறுநாள், டிம்மி காட்டில் நடந்துகொண்டே பைசனை ஏதாவது செய்யவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக புலியின் மீது மோதியது.
புலி: "ஓ கடவுளே.....நீ என்னை பயமுறுத்தி விட்டாய்."
டிம்மி: "பயமா?,..... என்னால் நீங்கள் பயந்தீர்களா? ஆனால் நீங்கள் ஒரு புலி."
புலி: "ஆமாம், நான் காட்டில் பெரிய பூனை என்று எனக்குத் தெரியும், ஆனால் இங்கு என்னை விட பெரிய மற்றும் பயங்கரமான விலங்குகள் எதுவும் இல்லை என்று நினைத்தால் நீ ஒரு முட்டாள். நான் நேற்று இரவு இரண்டு பெரிய விலங்குகளை பார்த்தேன், அவர்கள் என் குகையை கைப்பற்றி உள்ளார்கள். அதனால் நான் ஒரு புதிய குகைக்குத் தேட வேண்டியிருந்தது."
டிம்மி: "என்ன சொல்கிறீர்கள்.... உங்கள் குகையில் வசிப்பவர் உங்களைவிட பெரியவர் மற்றும் பயமுறுத்துபவற்களா? இல்லை... அது ஒரு எருமை, நீங்கள் என்ன சொல்கிறீர்கள் இரண்டு என? அங்கே ஒரு எருமை மட்டுமே வாழ்கிறது."
புலி: "ஒரு எருமையைப் பார்த்து பயந்து ஓடும் முட்டள் நான் என்று நினைக்கிறாயா? அங்கு இரண்டு பெரிய மனிதர்கள் இருந்தார்கள்."
டிம்மி: "மனிதர்களா?"
புலி: "ஆமாம்... உண்மையில் யார் அவர்கள் என்று எனக்கு தெரியவில்லை நான் குகைக்குள் நுழையவில்லை வெளியே இருந்து அவர்கள் குரல்களை மட்டுமே கேட்டேன், அவர்கள் என்னைத் தாக்கப் போவதாக பேசிக்கொண்டிருந்தனர்."
டிம்மி: "ஹ ஹ ஹ ... நீங்கள் ஒரு பாவாபட்ட புலி, அந்த எருமை உங்களிடம் விளையாடி இருக்கிறது, அங்கு ஒரு மனிதர்களும் இல்லை அது ஒரு எருமை. அது இந்த காட்டிற்குள் வந்த நாள் முதல் நான் அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் அது ஒரு எருமை."
புலி: "வாயை மூடு நறியே.... ஒரு எருமையை பார்த்து பயந்து போகும் விலங்கு நான் கிடையாது."
டிம்மி: "அதை என்னால் உங்களுக்கு நிரூபிக்க முடியும் ,நீங்கள் அவனுடைய இறை இல்லை, அவர்கள் தான் உங்களின் இறை. நாம் ஒரு காரியத்தைச் செய்வோம், நான் உங்களுடன் வருகிறேன், நாம் அந்த குகைக்குள் நுழைவோம், உள்ளே இருப்பவர்களைப் பிடிக்க நான் உங்களுக்கு உதவுவேன். நான் அந்த திமிர்பிடித்த எருமையை எப்படியாவது பலி தீர்க்க விரும்புகிறேன். ஆனால்... உங்கள் குகைக்கு ஈடாக நீங்கள் ஒருபோதும் என்னை தாக்க மாட்டேன் என ஒரு சத்தியம் செய்ய வேண்டும்."
புலி: "ஹ்ம்ம் நீ உண்மையைச் சொல்கிறாயா? ஆனால் நீ என்னை விட்டு விட்டு வெளியே ஓடிவிட்டால்?"
டிம்மி: "சரி, நம்மைச் சுற்றி ஒரு கயிற்றைக் கட்டிக்கொள்வோம், உங்கள் வயிற்றுக்கு ஒரு முனை, மற்றொன்று என்னுடையது. நான் ஓட முயற்சித்தால் நீங்கள் என்னை இழுக்க முடியும்."
இதற்கு அந்த புலி ஒப்புக் கொண்டது. அவர்கள் இருவரும் தங்களைச் சுற்றி ஒரு கயிற்றைக் கட்டிக்கொண்டு, குகையை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். "அந்த டிம்மி நரி மகிழ்ச்சியடைந்தது, பைசனுக்கு ஒரு பாடம் கற்பிக்கவும் மற்றும் புலியின் நம்பிக்கையை சம்பாதிக்கவும் ஒரு வழியைக் கண்டுபிடித்தது." இருவரும் குகைக்கு அருகே வந்தனர். பைசன் எருமை அவர்களை பார்த்ததும் என்ன நடக்கின்றது என புரிந்துக் கொண்டது.
பைசன்: "ஹ்ம்ம் அந்த நரி இவ்வளவு புத்திசாலியா? இதனை நான் அமைதியாக கையாள வேண்டும். உடனே பைசன் குரலை உயர்த்தி " முட்டல் நாரியே..... நான் உன்னிடம் இரண்டு புலிகளைக் கொண்டுவரச் சொன்னேன், நீ ஒரே ஒரு புலி மட்டுமே கொண்டு வந்து இருக்கின்றாய். இரு புலிகளை கூட்டி வந்து நாம் பகிர்ந்து சாப்பிடலாம் என நேற்றிரவு கூறினாய் ஆனால் இப்போது ஒரே ஒரு புலி மட்டும் கூட்டி வந்து இருக்கின்றாய். இதற்காக நான் நேற்று இரவில் இருந்து பசியோடு இருக்கின்றேன். இந்த ஒரு புலி இவ்வாறு என் பசியை அடக்கும்."
புலி: "அட நரி யே நீ அவர்களுக்காக வேலை செய்கிறதா..."
டிம்மி: "இல்லை ., இது உண்மை இல்லை."
பைசன்: "அஹ......சரி, அந்த புலியை இங்கு கொண்டு வா.."
அந்த புலி மிகவும் பயந்து கொண்டு கயிற்றின் மறு முனையில் இருக்கும் நரியை பற்றி சிறிதும் கவலை இல்லாமல் ஓட தொடங்கியது..... டிம்மி அவ்வ்வ்வ் அவ்வ்வ் என கதறியது....
பைசன்: "அந்த நரிக்கு இதுதான் சரியான பாடம். இன்று நான் ஒரு மிக முக்கியமான பாடத்தை கற்றுக் கொண்டேன். நான் அமைதியாக இருக்கவில்லை என்றால் அந்த இருவரையும் துரத்த முடிந்திருக்கிறது. எவ்வளவு கடினமான நிலைமையில் இருந்தாலும் சரி நாம் எப்போதும் அமைதியா இருக்க வேண்டும்."
ஆம்..., பைசன் சொல்வது சரிதான்... ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் நாம் அமைதியாக இருக்க வேண்டும், அமைதியா இருந்தால் மட்டுமே அதற்கான சரியான முடிவை நம்மால் எடுக்க முடியும். நாம் நம் பொறுமையை இழந்திருந்தால் அந்த புலிக்கு இரையாக இருந்திருப்போம். அமைதியாக இருந்ததால் மட்டுமே அந்த புலியை விரட்ட முடிந்தது.
0 Post a Comment