Attempt To Transcend Short Moral Story In Tamil
முயற்சி திருவினையாக்கும் முயன்றால் சாதிக்க முடியும்
ஒரு ஊரில் ஊர் தலைவர் ஒருவர் அந்த ஊரில் உள்ளவர்களுக்கு ஒரு போட்டி ஒன்று வைத்தார். அந்த போட்டி என்னவென்றால் ஊர் மக்கள் நடக்கும் பாதையில் ஒரு பெரிய வட்டவடிவ கல் ஒன்றை வைத்து அதை நகர்த்துபவர்களுக்கு மிக பெரிய பரிசு உண்டு என்று கூறினார். ஊரில் உள்ள அனைவரும் அந்த ஊர் தலைவர் சொன்ன போட்டியை கண்டு சிரித்தார்கள், இன்னும் சிலர் இவ்வளவு பெரிய கல்லை யார் தூங்குவார் என்று கண்டு கொள்ளாமல் சென்றார்கள். சிலபேர் அந்தக் கல்லை தாண்டி சென்றனர்.
அப்போது அந்த ஊருக்குள் ஒரு வியாபாரி ஒருவர் வந்தார். அவர் பாதையில் கிடக்கும் கல்லை பார்த்து அய்யோ!! என்ன இவ்வளவு பெரிய கல் நடக்கும் பாதையில் இருக்கிறது என்று அந்த கல்லை தூக்கி போட முடிவு செய்தார் ஆனால் அந்தக் கல்லை அவரால் அகற்ற முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்துவிட்டு வீடு திரும்புகிறர். இதே போன்று தினமும் அந்தக் கல்லை நகற்ற முயற்சி செய்தார் விடாமுயற்சியில் அந்தக் கல்லை நகர்த்தினார். நகர்த்திய அந்த கல்லின் அருகே ஒரு தாள் இருப்பதை கவனித்தார் உடனே அந்த தாளை எடுத்து பார்க்கும் போது அதில் ஏதோ ஒன்று எழுதிருப்பதை பார்க்கின்றார் அந்த தாளில் எழுதியிருப்பது இந்த கல்லை தூக்குபவர்க்கு யானை மேல் ஏற்றி ஊர் மரியாதையை செய்யப்படும் என்று எழுதப் பட்டிருந்தது. இதை மரத்தின் பின்னால் மறைந்து கொண்டு பார்த்து கொண்டு இருந்த ஊர் தலைவர் நாளைக்கு உனக்கு ஊர் மரியாதை அளிக்கப்படும் என்று கூறினார்.
மறுநாள் ஊர் தலைவர் சொன்ன படி அந்த வியாபாரியை யானை மேல் ஏற்றி ஊர் மரியாதையை செய்து அவருக்கு ஐந்து தங்க நாணயங்கள் வழங்கப்பட்டது. இதை கண்ட ஊர் மக்கள் நாமும் அந்த கல்லை நகர்த்த முயற்ச்சி செய்திருக்கலாமே என்று வருந்தினார்கள்.
Moral of The Story:
"நமக்கும் கடவுள் தருகின்ற வாய்ப்புகள் கடினமாக இருக்கலாம் அதை கடினம் என்று பார்க்காமல் தினமும் முயற்சித்தால் அதன் பலன் இரட்டிப்பாக இருக்கும். அந்த வாய்ப்புகள் கடினமாக இருக்கிறது என்று முயற்சிக்காமல் இருந்தால் பின்பு அதை நினைத்து வருந்த வேண்டியது இருக்கும். "
"முயற்சி திருவினையாக்கும் முயன்றால் சாதிக்க முடியும்."
0 Post a Comment