பேராசை பெரு நஷ்டம்
ஒரு ஆணும் பெண்ணும் நான்கு வருடங்களாக காதலித்து வந்தார்கள். இருவரும் கல்யாணம் செய்யலாம் என முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி தனியாக கல்யாணம் செய்து கொண்டு அவர்களின் புது வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். புதிய வாழ்க்கை வறுமையில் ஆரம்பிக்ககூடாது என்று அந்த ஆண் வேளைக்கு போகலாம் என முடிவு செய்து அந்த பெண்ணிடம் நான் மூன்று வருடங்கள் உன்னை விட்டு தனியா இருந்து வேலை பார்க்க வேண்டும் அப்போது தான் நாம் வாழ்வில் வேகமாக முன்னேற முடியும் என்று கூறினான். அவளுக்கு விருப்பம் இல்லையென்றாலும் அவனுக்காக சரி என்று கூறினாள். அவன் அடுத்த ஒருசில நாட்களில் ஒரு அரண்மனைக்கு வேளைக்கு செல்கின்றான்.
அங்கே அரண்மனையின் அரசர் அவனிடம் உனக்கு தினமும் சம்பளம் வேண்டுமா இல்லையென்றால் நீ வேலையை விட்டு வீட்டிற்கு செல்லும் போது மொத்தமாக வேண்டுமா என்று கேட்டார். அவனும் கடைசியில் நான் வீட்டிற்கு செல்லும் போது வாங்கி கொள்கின்றேன் என்றான். அவனும் நன்கு உழைத்தான். அவன் கூறியது போல் மூன்று வருடங்கள் கழித்து போனது கடைசி நாள் அன்று அரசரிடம் என்னுடைய காசு தாருங்கள் என்று கேட்டான். அரசர் அவரின் இரண்டு கையிலும் இரண்டு பெட்டிகளை கொண்டுவந்தார் அதில் ஒரு பெட்டி தங்க நிறத்தில் இருந்தது இன்னொரு பெட்டி இரும்பு நிறத்தில் இருந்தது.
அவன் தங்கநிற பெட்டியில் தான் கண்டிப்பாக காசு இருக்கும் என நினைத்து தங்கநிற பெட்டியை அரசரிடம் இருந்து வாங்கினான். அதை ஆசையாக திருந்து பார்த்தான் ஆனால் அதில் எதும் இல்லை. அவனுக்கு பயங்கரமான கோவத்துடன் அரசரிடம் நான் மூன்று வருடம் வேலைப் பார்த்துள்ளேன் நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டிர்களே என சண்டை போடுகிறான். அவனை பார்த்து அரசர் சிரித்து கொண்டே நான் உன்னிடம் இரண்டு பெட்டிகளை கொடுத்து அதில் ஒரு பெட்டியில் தான் காசு இருக்கும் என்று நான் கூறினேன் நீதான் தங்கநிற பெட்டியை எடுத்து கொண்டாய் இப்போது என்னிடம் சண்டை போடுகிறாய் நான் என்ன செய்வது என்று கூறினார்.அவன் அரசரின் கையில் இருந்த மற்றொரு பெட்டியை வாங்கி திறந்து பார்க்கிறான் அதில் ஐந்து லட்சம் மற்றும் ஒரு கிராம் தங்கம் இருந்தது. அப்போது அரசர் அவனிடம் ஒன்று கூறினார் நீ நன்றாக வேலை பார்த்தாய் அதனால் தான் உனக்கு அதிகமான காசு கொடுக்க முடிவு செய்தேன்.
நீ பேராசை படுகிறாயா?..... இல்லை கிடைக்குறது போதும் என்றும் நினைக்குறாயா?..... என்று பார்க்க தான் இப்படி உன்னை சோதித்தேன் என்றும் கூறினர். ஆனால் நீ நிறத்தை வைத்து இதில் தான் அதிக பணம் இருக்கும் என்றும் ஆசைப்பட்டு விட்டாய். பேராசை எப்போதும் பெரு நஷ்டத்தை கொடுக்கும் அது மட்டும் இல்லாமல் நிறத்தை வைத்துக்கொண்டு எதையும் முடிவு செய்யக்கூடாது என்றுக் கூறினார். பின்பு அவன் தவறான பெட்டியை தேர்ந்தெடுத்தர்காக வருந்தி அரசரிடம் மன்னிப்பு கேட்டான். அரசரும் அவனை மன்னித்து காசை கொடுத்தார். காசை பெற்றுக்கொண்டு அவன் மனைவியை பார்க்க ஆசையாக வீட்டிற்கு செல்கின்றான்.
அவள் அவனை எதிர்பார்த்தபடி வாசலில் நின்றாள். தன் கணவன் வருவதை பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி கொள்கிறாள்.
அவன் தன் மனைவியை கட்டி அணைத்தபடி உள்ளே அழைத்து செல்கிறான். பின்பு இரண்டு பேரும் உள்ளே சென்று பேசுகிறார்கள் அப்போது அவன் நடந்ததை மனைவிடம் கூறினான். எதையும் நிறத்தை வைத்துக்கொண்டு முடிவு செய்யக்கூடாது...... பேராசை படவும் கூடாது என்று... அவன் கூறியதை கேட்ட அவள் அரசர் கூறியது சரி எனக் கூறினாள். அவனும் தன் தவறை உணர்ந்துக் கொண்டான்.
Moral Of The Story:
"நாமும் இதே போலத் தான் இது தான் நல்லது என்று நிறத்தை வைத்துக்கொண்டு முடிவு செய்கிறோம் அதன் மேல் ஆசை படுகிறோம். "
"நிறத்தை வைத்து முடிவு செய்யாதே. நிறத்தில் எதும் இல்லை. இருப்பதை வைத்து வாழக் கற்றுக் கொள்வோம்."