- ராமு
- சோமு
ராமு மற்றும் சோமு, என்ற நல்ல நண்பர்கள் இருந்தனர். அவர்களுக்கு உலகத்தை சுற்றிப்பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டனர். அதன்படி ஒருநாள் அவர்கள் காட்டிற்குள் செல்ல முடிவு செய்கிறார்கள். அந்த காடு மிகவும் அடர்ந்த காடு ஆனால் அவர்களுக்கு எந்த சமயத்திலும் ஆபத்து வரலாம் என இருவரும் தெரிந்து வைத்திருந்தனர். அதனை தொடர்ந்து இருவரும் காட்டில் இரவு எந்த ஆபத்து வந்தாலும் பிரியக் கூடாது என சத்தியம் செய்துகொண்டனர்.
மறுநாள் இருவரும் அந்த காட்டிற்குள் செல்கிறார்கள், திடீரென்று எதிர்பாராமல் ஒரு கொடூர சத்தம் கேட்டது, அப்போது அவர்களை நோக்கி ஒரு பெரிய கரடி வந்தது. இருவரும் மிகவும் பயத்தோடு இருந்தார்கள். ராமு ஓடிபோய் பக்கத்தில் இருந்த மரத்தில் எரிக்கொண்டன், ஆனால் பாவம் சோமுக்கு மரம் ஏறுவதற்குத் தெரியாது.
அதனால் ராமு விடம் சோமு "மரத்தின் மேல் ஏறுவதற்க்கு எனக்கு உதவி செய்வாயா? கரடி என்னை சாப்பிட்டுவிடுமே தயவு செய்து எனக்கு உதவிசெய்."
"என்னால் கீழே வர முடியாது அந்த கரடி அருகில் வந்துவிட்டது அதுமட்டும் இல்லாமல் இந்த மரத்தில் இடம் இல்லை அதனால் நீ வேறு இடம் பார்த்துக்கொள்" என ராமு கூறினான்.
ராமு சோமுவிற்க்கு உதவிச்செய்யவில்லை ஆனால் சோமு மிகவும் புத்திசாலி பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது கரடி இறந்தவர்களை சாப்பிடாது என ஆசிரியர் கூறியது அவனுக்கு நினைவில் வந்தது அதனால் அவன் கீழே படுத்துக்கொண்டான். சிறிது நேரத்திற்கு மூச்சி விடாமல் இறந்தவர்கள் போல படுத்துகொண்டான். அந்த கரடி சோமு அருகே வந்து அவனை நுகர்ந்து பார்த்துவிட்டு மெதுவா நகர்ந்து சென்றது. ஏனென்றால் பொதுவாக கரடி இறந்துப் போனவர்களை தொடவே செய்யது.
கரடி போனதும் மேலே இருந்த ராமு கிழ் இறங்கி வந்து சோமுவிடம் "அந்த கரடி உன்னிடம் என்ன சொன்னது" என ராமு கேட்டேன்.
அதற்கு சோமு "ஆபத்து வரும் நேரத்தில் உன்னை தனியாக தவிக்க விட்டுபுட்டு ஓடும் நண்பனை எப்போவும் நம்பாதே என கரடி சொன்னதாக சோமு கூறினான்."